மழை கொண்ட காலநிலை நாட்டின் பல இடங்களில் தொடரும்-கடல் கொந்தளிப்பாக இருக்கும்

தற்போது காணப்படும் மழை கொண்ட காலநிலை நாட்டின் பல இடங்களில் தொடரும். மழை அல்லது இடியுடன்கூடிய மழை நாட்டின் அனேகமான பகுதிகளில் காணப்படும் என வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தின் மட்டக்களப்பு நிலைய பொறுப்பாளர் க.சூரியகுமாரன் தெரிவித்தார்.


சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டிலும் சூழவள்ள கடல் பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் (மணிக்கு 70 கிலோமீற்றர்) அதிகரித்து வீசலாம்.

கடல் பிராந்தியங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இலங்கைத் தீவை சுற்றியுள்ள கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படும். கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது சில சந்தர்ப்பங்களில் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசுவதன் காரணத்தினால் இந்தக் கடல் பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.