பட்டிருப்பு கல்வி வலயத்தின் சாதனையாளர் பாராட்டு விழா

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்வி வலயங்களில் மிகப்பெரும் கல்வி வலயமான பட்டிருப்பு கல்வி வலயத்தின் சாதனையாளர் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.


பட்டிருப்பு கல்வி வலயத்தின் வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம்,களுவாஞ்சிகுடி பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சர் அஜந்த ரட்னாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பாடசாலை மட்டத்தில்,வலய மட்டத்தில்,தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

பாடரீதியான,இணைப்பாட ரீதியான சாதனைகள் படைத்த மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கல்விக்காக அரும்பணியாற்றி ஓய்வுபெற்றுச்சென்ற ஆசிரியர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.