ஆலயங்களில் விசேட பூஜைகள் நடைபெற்றுவருவதுடன் மரநடுகை திட்டங்களும் நடைபெற்றுவருகின்றன.
இதன் கீழ் மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆலயங்கள் மற்றும் தேவாலயங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆசிவேண்டி பல்வேறு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பின் பிரசித்திபெற்ற ஆலயமான களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் பட்டிருப்பு தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் கலந்துகொண்டார்.
அத்துடன் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சனத் நந்தலால் உட்பட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பெருமளவான பொதுமக்கள்,கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது ஜனாதிபதியின் பிறந்த தின நினைவாக கலந்துகொண்டவர்களினால் மரக்கன்றுகளும் நடப்பட்டன.