புனித மிக்கேல் கல்லூரியின் ஜுனியர் கூடைப்பந்தாட்ட வீரர்களுக்கு அமெரிக்கா செல்ல புலமைப்பரிசில்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் ஜுனியர் கூடைப்பந்தாட்ட வீரர்கள் இருவருக்கு அமெரிக்காவுக்கான நல்லிணக்க விளையாட்டு விஜயத்தினை மேற்கொள்வதற்கான புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் வாசிங்டனில் நடைபெறவுள்ள கூடைப்பந்து விளையாட்டுப் போட்டியைப்; பார்வையிடுவதற்காக ரூபாய் 1.2 மில்லியன் சோண் மோகன்ராஜ் மற்றும் ஸரோண் சுரேஸ் ரொபட் ஆகியோருக்கு அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே. சிசனினால் இப்பணம் வழங்கப்பட்டது.

இந்த நேர்முகத்தேர்வுக்கு மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் இருந்து 15 மாணவர்கள் தோற்றிய நிலையில் இந்த இரு மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது.

புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் இருவர் உட்பட இலங்கையிலிருந்து 6 பேர் அமெரிக்கா செல்வதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.





(பட உதவி எஸ்.பாக்கியநாதன்)