அகில இலங்கை திவிநெகு அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் என்.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் அகில இலங்கை திவிநெகு அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் தேசிய செயலாளரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான ஜகத்குமார,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக், கடுவெல்ல நகரசபையின் முதல்வர் பீபால் ஹெட்டியாராட்சி,சங்கத்தின் தேசிய பொருளாளர் பாசூல் அன்வர்,திவிநெகு திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் ஏ.மனோகிதராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சமுர்த்தி அதிகாரசபை திவிநெகும திணைக்களமாக மாற்றப்பட்டதன் பின்னர் அகில இலங்கை திவிநெகு அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கம் புனரமைக்கப்பட்டு சிறந்த முறையில் செயற்பட்டுவருகின்றது.
நாடளாவிய ரீதியில் 20ஆயிரம் திவிநெகும உத்தியோகத்தர்கள் கடமையாற்றிவருகின்றனர்.இவர்களின் நலன்கள் தொடர்பில் அகில இலங்கை திவிநெகு அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கத்தினால் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன.
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் சுமார் 600க்கும் அதிகமான திவிநெகும உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்த கூட்டத்தில் விசேடமாக ஜனாதிபதித்தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை தீர்மானிக்கப்பட்டுள்ளது.