மட்டக்களப்பு- திருகோணமலை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸொன்று இன்று திங்கட்கிழமை (10) பிற்பகல் தாண்டவன்வெளியில் பாடசாலை மாணவனொருவன் மீது மோதியதால் அம்மாணவன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
புனித மிக்கேல் கல்லூரியில் தரம் 08 இல் கல்வி பயிலும் கூழாவடியை சேர்ந்த கேசாந்த் என்னும் மாணவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு சென்றுகொண்டிருந்த பஸ் வண்டியே அவ்வழியே தனியார் வகுப்பொன்றுக்கு சைக்களில் சென்றுக்கொண்டிருந்த மாணவன் மீது மோதியுள்ளது.
இதன்போது மாணவன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.