பல நூற்றாண்டு வரலாறுகளைக்கொண்ட பெரியபோரதீவு அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழா கடந்த 29ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுவந்தது.
கிழக்கிலங்கையில் உள்ள சக்தி பீடங்களில் முதன்மையான பீடமாக பெரியபோரதீவு பத்திரகாளிம்மன் ஆலயம் விளங்கிவருகின்றது.
தொடர்ந்து 10 தினங்கள் நடைபெற்றுவந்த ஆலயத்தின் வருடாந்த சக்தி விழாவில் திங்கட்கிழமை சுப்புரத்திருவிழா நடைபெற்றதுடன் செவ்வாய்க்கிழமை காலை சக்தி மகா யாகம் சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதம குரு விஸ்வப்பிரம்மஸ்ரீ வை.இ.எஸ்.காந்தன் குருக்கள் தலைமையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் அம்பாளின் நோற்புக்கட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு வாவிக்கரையில் அம்பாளின் நீராடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை அலங்கரிக்கப்பட்ட அம்பாளுக்கு ஆயிரம் மடைகள் வைக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் தீக்குளி காவல் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.இதன்போது தேவாதிகளுடன் அம்பாள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்ட அடியார்களின் அகோகரா கோசத்துடன் தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த தீமிதிப்பு உற்சவத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்க கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
தீமிதிப்பினை தொடர்ப்து அம்பாளுக்கான சக்தி பூஜை நடத்தப்பட்டு தேவாதிகள் அருள்வாக்கு சொல்லும் நிகழ்வு நடைபெற்று இறுதியாக ஆயுத பூஜை சிறப்பாக நடைபெற்றது.