மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வும் பிரதீபா பிரபா விருது பெற்று பாடசாலைக்கும் மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த ஆசிரியரை கௌரவிக்கும் நிகழ்வும் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாணவர்களினால் இப்பாடசாலை ஆசிரியர்களுக்கு மலர்மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர் .
இதனை தொடர்ந்து ஆசிரியர்களினால் ஆசிரியர் கீதம் பாடப்பட்டு தொடர்ந்து ஆசிரியர்களின் பாடல்கள் ,நகைச்சுவை நாடகம் ,கவிதை ,நடனம் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாணவர்களினால் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டதோடு அவர்களுக்கு நினைவு பரிசில்களும் வழங்கப்பட்டது.
ஆசிரியர் தின நிகழ்வில் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளக்கூடிய பிள்ளளைகளை இலங்கையின் நற்பிரஜையாக பெற்றுத்தர எல்லையற்ற கருணையுடன் செய்த சேவைகளுக்காக கௌரவிக்கும் முகமாக கல்வி அமைச்சினால் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஆசிரியர் பிரதீபா பிரபா விருது விருதைப்பெற்று பெருமை சேர்த்த ஆசிரியர் திருமதி தே .லோகநாயகம் கௌரவிக்கப்பட்டார்.
மீண்டும் தமது பாடசாலை மாணவர்களின் முன்னிலையில் ஆசிரியர் தின நிகழ்வில் பாடசாலை அதிபர் திருமதி .என் .தர்மசீலனிடம் இருந்து பிரதீபா பிரபா விருது மற்றும் சான்றிதழை பெற்றுக்கொண்டதுடன் பாடசாலை சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.