மட்டு.நீதிமன்றில் வேலைகளில் ஈடுபட்டிருந்த கைதி ? இருந்து வீழ்ந்து உயிரிழப்பு

மட்டக்களப்பு சிறைக்கைதி ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் மரத்தில் இருந்து வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.


மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து கைதிகளை நீதிமன்றின் வளாகத்தில் துப்புரவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மரம் ஒன்றில் ஏறி மரக்கிளைகளை வெட்ட முனையும்போதே தவறி வீழ்ந்ததாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் சில தகவல்கள் நீதிமன்றத்தில் உள்ள கட்டிடத்தின் கூரையில் வேலைப்பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கின்றன.

இன்று பிற்பகல் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

உயிரிழந்தவர் பட்டிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பிரதேசத்தினை சேர்ந்த பரமானந்தமூர்த்தி சண்முகநாதன்(45வயது)எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.