நவராத்திரி விழாவின் விஜயதஷ்மியை ஒட்டிய 10ஆம் நாள் திரு விழாவானா மாநம்பு திருவிழா( மகுட சூர வதை ) நேற்று முன்(3) இரவு பாண்டிருப்பு அருள் மிகு ஸ்ரீசித்தி அரசடி விநாயகர் அம்பாள் ஆலயத்தில் வெகு விமர்சயாக இடம் பெற்றது.
ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ லோக நாதன் குருக்கள் தலைமையில் இடம் பெற்ற இவ்விழாவில் ஆன்மிக அதிதியாக கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்மின் மதுரை சுவாமி வேதாந்த ஆனந்தா குருக்கள் கலந்து கொண்டு உபன்னியாசங்களைக் கூறினார்கள்.
இவ்விழா மேற்படி ஆலயத்திலிருந்து பாண்டிருப்பு ஸ்ரீ வட பத்திர காளி அம்பாள் ஆலயத்திற்கு ஊர்வலமாகச் சென்று ஆலய வளாகத்தில் விசேட பூசை வழிபாடுகளை முடித்து மீண்டும் ஊர்வலமாக அம்பாள் கொண்டு வரப்பட்டு அம்பாளுக்கு பிராயச்சித்த அபிஷேகம் நடாத்திய பின் விஷேட பூ சையுடன் ஆராதனையும் இடம் பெற்றது.
இவ்விழாவின் 9ஆம் நாள் சரஸ்வதி தேவிக்கு விஷேட பூ சை இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.