(ரவி)
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஏறாவூர்ப்பற்று- 01 கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஐயன்கேணி தமிழ் வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மயிலம்பாவெளி உதவும் கரங்கள் அமைப்பின் பணிப்பாளர் ஏ.ஞானம் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சென்ற வருடமும் (2013) இவ்வருடமும் (2014) புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைக் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கும் 2013ல் க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தியெய்திய மாணவர்களுக்கும் பதக்கங்களையும் அணிவித்து பரிசுப்பொருட்களையும் வழங்கி கௌரவித்துப் பாராட்டினார்.
இவ்வருடம் (2014) விளையாட்டுத்துறையில் மாகாணமட்டத்தில் சம்பியன் இடத்தைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கும் பரிசில்களை வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்கள் பல கலை நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தினர்.