கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அனைத்து பீட மாணவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செய்யும் வகையில் முதலாவது மெழுகு திரிக்கு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பிரேம்குமார் தீயிட்டு ஆரம்பித்துவைத்தார்.
அதனைத்தொடர்ந்து மாணவர்கள்,விரிவுரையாளர்கள் மெழுகு தெரியில் தீபம் ஏற்றி உயிர் நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செய்தனர்.
இதன்போது இன்றை தினத்தினை துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளதுடன் அனைவருக்கும் கறுப்பு பட்டியும் அணிவிக்கப்பட்டது.