மண்முனை வடக்கு பிரதேச செயலக முத்தமிழ் விழாவும் “தேனகம்” சிறப்பு மலர் வெளியீடும்

(லியோன்,சுஜி)

மட்டக்களப்பு,மண்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் கலாச்சார பிரிவினால் இன்று வியாழக்கிழமை (30) முத்தமிழ் விழா கலை நிகழ்வும், தேனகம் சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வும் கௌரவிப்பு நிகழ்வும் மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் யோகராசா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிற்பபு அதிதிகளாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கிரிதரன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தர் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பிறேம்குமார், கௌரவ அதிதியாக எதவி மாவட்ட செயலாளர் ரங்கநாதன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் அலுவலகர்கள், கிரம உத்தியோகஸ்தர்கள் பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது 21வது தேனகம் சிறப்பு மலர் வெளியீடு நிகழ்வு இடம்பெற்றதுடன் நாடகம், இசை, வாக்கியம், கூத்து போன்ற துறைகளில் சிறப்பு பெற்று மட்டுநகர் மண்ணுக்கு சிறப்பினைப் பெற்றுத்தந்த பல கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

ஆத்துடன் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் பாடசாலை மட்;டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.