சிறுவர் தின நிகழ்வின்போது வறுமைக்கோட்டின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட 121 மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகளும் அனைத்து மாணவர்களுக்கு இனிப்பு பண்டங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
முதியோர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு முதியோர் இல்லத்தில் உள்ள 50 முதியவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு பெண்கள் அரிமா சங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல காலமாக பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.