இம்மாதம் எதிர்வரும் 18ம் திகதி (18.10.2014) காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்வினை சிறப்பாக நடத்தவுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கும் பழைய மாணவர்களுக்குமான சினேகபூர்வ கிறிக்கட் போட்டியும், மதிய விருந்தும் மாலை 5.30 மணிக்கு கூடைப்பந்தாட்ட போட்டியும் மறுநாள் 19.10.2014 காலை 7.30 மணிக்கு திருப்பலியும் திருப்பலியின் பின்னர் பாரம்பரிய நிகழ்வுகள், காலை உணவு விருந்தும் தொடர்ந்து பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் நடைபெறவுள்ளதாகவும் நிகழ்வுகளில் பழைய மாணவர்கள் யாவரையும் கலந்து சிறப்பிக்குமாறும் கேட்டுக் கொள்வதாக சங்க பொதுச் செயலாளர் மைக்கவைட் ஐ.ஜே.சில்வெஸ்டர் தெரிவித்துள்ளார்.