மாதர் அபிவிருத்தி சங்கங்களுக்கு நிதி வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட 46 மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு நேற்று சனிக்கிழமை(04) நிதி வழங்கப்பட்டுள்ளது.


ஓந்தாச்சிமடம் விருந்தினர் மண்டபத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நகழ்வில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்; பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிதியுதவியினை வழங்கி வைத்தார்.

மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களின் முயற்சியின் பலனாக விசேட திட்டத்தின் மூலம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலுள்ள 46 மாதர் கராம அபிவிருத்திச் சங்கங்களுக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம், 46 இலட்சம் ரூபாய் நிதி இன்று வழங்கப்பட்டுள்ளதாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் கூறினார்.

இந்நிகழ்வில் மீள்;குடியேற்றப் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான பொன்.ரவீந்திரன், திருமதி ஞா.ருத்திரமலர், திருமதி எம்.பேரின்பமலர், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராசா, கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி எஸ்.காமினி மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகள், கிராம வேவை உத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்,  பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் உட்பட அதிகாரிகளுக்கு, மாதர் அபிவிருத்திச் சங்கத்தினரால் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப் பட்டமை குறப்பிடத்தக்கது.