நல்லையா வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலமைக்காரியாலயத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும் மாகாணசபை உறுப்பினருமான துரைராஜசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பிருமாகிய பொன் செல்வராசா, பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் செயோன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதிக்கிளை செயலாளர் குருநாதன், ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சசிதரன் ஆகியோர் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது வாணி விழா விசேட பூசைகளும் ஆராதணைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.