சின்ன ஊறணி பஸ் தரிப்பிடம் எப்போது பூர்த்தி செய்யப்படும்?

(ரவி)

சின்ன ஊறணி மக்களால் மட்-மாநகர சபையிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கமைய அமைக்கப்பட்டுவரும் பஸ் தரிப்பிடம் சுமார் 2 வருடங்களுக்கு மேலாகியும் இது வரை பூர்த்தி செய்யப்படவில்லை.

மழை காலங்களில் பாடசாலைச் சிறார்கள் மற்றும் பயணிகள் கஸ்ட்டப்படும் நிலையைக் கருத்திற் கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.