2004ம் ஆண்டு சுனாமிப் பேரலையின் கோரத்தாண்டவத்திற்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட இயற்கையின் பெரும் கோரத்தாண்டவமாக இதனை நோக்க முடியும். தோழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள இன்றைய நிலையில் ஓர் அனர்த்தம் ஏற்படுவதற்கான முன் எச்சரிக்கைகளை விடுத்தோம் ஆனால் அவர்கள் விலகிச் செல்லவில்லை என்பது போன்ற காரணங்களை கூறுவதை விடுத்து காரியங்களில் ஈடுபடுவதே அதிகாரிகளின் பொறுப்பாகும்.
இலங்கையின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் தோட்ட தொழிலாளர்களின் இருப்பிடம் உள்ளிட்ட அடிக்கடை வசதிகளையும் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க தவறியமைக்கு அதிகாரிகளே போறுப்புக்கூறவேண்டும்
இதுபோன்ற அனர்த்தங்கள் இடம்பெற்ற பிற்பாடு காரணங்களை ஆராயாது பெறுமதி மிக்க மனித உயிர்ரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இது போன்ற அனர்த்தங்களால் தொடர்ந்தும் பாதிப்புக்கள் ஏற்படா வண்ணம் அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட இடங்களில் இருக்கின்ற மக்களை பாதுகாப்பான இடங்களில் குடி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கோரியிருக்கின்றது.
