மட்டக்களப்பு ஆரையம்பதி அருள் மிகு ஸ்ரீ கந்தசுவாமி பேராலய ஜய வருச வருடாந்த பிரம்மோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் நடைபெற்று வருகிறது.
இவ் ஆலயத்திருவிழாவிள் தீர்த்தோற்சவம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. அத்துடன், திருவிழாக் காலங்களில் 1008, 108 சங்காபிசேகங்களும் நடைபெற்று வருகின்றன.
விசேட திருவிழாக்களான வேட்டைத் திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. சப்புறத் திருவிழா திங்கட்கிழமையும், தேர்த்திருவிழா 07ஆ ம்தி கதி திங்கட்கிழமையும் நடைபெறவுள்ளது.
உற்சவ கால பிரதம குருவாக ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கணேச சோதிநாத குருக்கள் கிரியைகளை மேற்கொள்கிறார்.