இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா கடந்த 24ம்தேதி தொடங்கியது. விழாவின் 9வது நாளான நேற்று ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது. 10வது நாளான இன்று விஜயதசமி விழாவாகும். இதனையொட்டி வீரமுனை இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்தில் இன்று (03.10.2014) காலை கும்பம் சொரியும் நிகழ்வு இடம்பெற்றது. அதனை தொடர்ந்து ஏடு தொடங்கும் நிகழ்ச்சி (வித்யாரம்பம்) ஆரம்பமானது. குழந்தைகளுக்கு பிரதி அதிபர் ரகுநாதன் ஆசிரியர் அ,ஆ.. எழுத கற்று கொடுத்தார்.