கல்லடிப்பாலத்தில் பாய்ந்த கள்ளக்காதலர்கள் -ஆண் மரணம்,பெண் உயிர்பிழைப்பு

(லியோன்)

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து இன்று காலை பாய்ந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 9.00மணியளவில் கல்லடி பாலத்தில் இருந்து கரடியனாறினை சேர்ந்த ஆணும் பெண்ணுமே இவ்வாறு பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இவர்கள் இருவரும் காதலர்கள் எனவும் ,இவர்களுக்கு ஏற்பட்ட குடும்ப பிரச்சினைகள் காரணமாகவே தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக பொலிசாரின்  விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்டவர் தர்மலிங்கம் ராஜா (31) தற்போது இவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் , உயிருடன் மீட்கப்பட்டவர்  ஞானசெல்வம் வினோ  (27) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவர்கள்  இருவரும் கரடியனாறு பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , பெண்ணின் கணவர் மத்திய கிழக்கில் தொழில்புரிந்துவருவதாகவும் தெரியவருகின்றது.

இவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது .