பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் இந்த அபிவிருத்திப்பணிகளின் வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டுவருகின்றன.
இதன் கீழ் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட காந்திபுரத்திற்கான பொது விளையாட்டுமைதானம் புனரமைப்பு பணிகள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனால் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இக்கிராமத்தின் அடிப்படைத்தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன் கீழ் இப்பகுதியில் இருக்கும் இளைஞர் யுவதிகளின் விளையாட்டுத்திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இந்த விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நாட்டின் எழுச்சி தேசிய வேலைத்திட்டமான கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர்களான பொன்.ரவீந்திரன்,ருத்திரமலர் ஞானபாஸ்கரன்,பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பேரின்பமலர் மனோகரதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.