வளப்பற்றாக்குறை ஆளணிப்பற்றாக்குறை பரந்த பிரதேசம் என பல சவால்களின் மத்தியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் படிப்படியாக முன்னேறி வருவதை அவதானிக்க முடிகின்றது.
2014 புலமைப்பரீட்சைப் பெறுபேறு அதற்கு சான்று பகர்வதை அவதானிக்க முடியும். இம்முறை மொத்தம் 57 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை தாண்டி சித்தி பெற்றுள்ளனர். இதில் 2010 இல் புதிதாக உருவாக்கப்பட்ட முதலைக்குடா கணிஸ்ட பாடசாலை 10 மாணவர்களை சித்தியடைய வைத்து மகத்தான சாதனையை படைத்துள்ளது.
அது மாத்திரமன்றி முனைக்காடு சாரதா வித்தியாலயமும் 2010 இல் உருவாக்கப்பட்ட புதிய பாடசாலை அப் பாடசாலையிலிருந்து தோற்றிய 27 மாணவர்களும் 100 புள்ளிக்கு மேல் பெற்றதோடு 05 மாணவர்களை சித்தியடையச் செய்து வலயத்திலும் மாவட்டத்திலும் புதிய சாதனையை படைத்துள்ளது.
2010 இல் வலயத்தில் சித்தி பெற்றவர்கள் 15 (வெட்டுள்புள்ளி-
2011 சித்தி பெற்றவர்கள் - 43
2012 சித்தி பெற்றவர்கள் - 31 (வெட்டுப்புள்ளி- 147 )
2013 சித்தி பெற்றவர்கள் - 34 (வெட்டுப்புள்ளி- 155 )
2014 சித்தி பெற்றவர்கள் - 57 (வெட்டுப்புள்ளி- 158 )
இந்த சாதனையை பெறுவதற்கு பாடுபட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் பிதிக்கல்விப் பணிப்பாளர்கள் உதவிக்கல்விப் பணிப்பாளர் ஆசிரிய ஆலோசகர்கள் பாடசாலை சமூகம் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் பாராட்டுதல்களுக்கு உரியவர்கள்.