மட்டு.இந்துக்கல்லூரிக்கு பெருமைசேர்த்த கிரிக்கட் மற்றும் உதைபந்தாட்ட அணிகளை கௌரவிக்கும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கு வெற்றியை பெற்று தந்த கிரிக்கெட் அணி வீரர்களையும், உதைப்பந்தாட்ட அணியினரையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் .கே .அருட்பிரகாசம் தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பின் போர் 2014 என வர்ணிக்கப்பட்ட சிகரத்தினை நோக்கி என்னும் பெரும் கடின பந்து கிரிக்கெட் போட்டி  மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கும் , பெரிய கல்லாறு மத்திய கல்லூரிக்கும் இடையில் கடந்த 29ஆம் திகதி கல்லடி சிவானந்தா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

இங்கு இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி வெற்றிப்பெற்று 2014ஆம் ஆண்டுக்கான சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

இதேபோன்று கொழும்பு ஆனந்த கல்லூரியில் கடந்த 26ஆம் 27ஆம் திகதிகளில் நடைபெற்ற சாம் விஜயசிங்க சவால் கிண்ண 48 பாடசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றி 3ஆம் இடத்தை பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு இந்துக்கல்லாரி அணி பெற்றுக்கொண்டது.

இந் நிகழ்வில்  அதிதிகளாக கல்லடி 231ஆம் ராணுவ படை பிரிவு அதிகாரியும் . சமூக தொடர்பாடல் அதிகாரியுமான மேஜர் நாலக ஹெட்டிகொட ,மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்ட வைத்திய அதிகாரி .எம்.என் .எம் .ரகுமான் , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி  அதிகாரி .எ .சுகுமாரன் , மொபிடெல் பிராந்திய முகாமையாளர் .டி .தர்மேந்திரன் , கோட்டமுனை விளையாட்டு கழக உபதலைவர் சடாட்சரராஜா, மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

இந்  நிகழ்வானது இந்துக் கல்லூரி மைதானத்தில் இருந்து வெற்றிக்கின்னங்களுடன் வீரர்களை  நிகழ்வில் கலந்துக்கொண்ட அதிதிகள் ,ஆசிரியர்கள் .மாணவர்கள் ,பெற்றோர்கள்  ஆகியோர் பவனியாக மட்டக்களப்பு நகர பிரதான வீதி ஊடாக கல்லூரி  மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர் .

கல்லூரி மண்டபத்தில்  இடம்பெற்ற  நிகழ்வில் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளை பெற்றுத்தந்த மாணவர்களை கௌரவித்து  சான்றிதழ்களும் , வெற்றிக்கிண்ணங்களும்  2014 ஆண்டுக்கான கல்லூரி சம்பியன் வெற்றிக்கிண்ணமும் வழங்கிவைக்கப்பட்டது.