க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்குகள் மட்டக்களப்பு வலயங்களில் நடைபெற்றன.
இக்கருத்தரங்குகள் 2014 பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்காக மட்டக்களப்பு மேற்கு, கல்குடா, மட்டக்களப்பு ஆகிய வலயங்களில் கே. பாஸ்கரன், எஸ். ஸ்ரீகிருஸ்ணராஜா, கே. சத்தியநாதன் ஆகிய வலயக்கல்விப் பணிப்பாளர்களின் அனுமதியுடன் கன்னன்குடா, கிரான், ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலயம் ஆகிய இடங்களில் இடங்களில் உள்ள பாடசாலைகளில் நடத்தப்பட்டன.
கொழும்பு. றோயல் கல்லூரியின் பிரபல்யமான ஆசிரியரினால் இந்த கருத்தரங்குகள் சிறப்பாக நடாத்தப்பட்டன.
இக்கருத்தரங்குகளின் ஆரம்ப நிகழ்வில் ஞா.ஸ்ரீநேசன் மட்டக்களப்பு மேற்கு பிரதிக் கல்விப் பணிப்பாளர், திருமதி எஸ். ரவிராஜ் பிரதிக் கல்விப் பணிப்பாளர், கோட்டக்கல்வி அதிகாரி – எம்.பாலசுப்பிரமணியம் மற்றும் டி. யுவராஜன் ஆகியோரின் மேற்பார்வையில் இக்கருத்தரங்குகள் நடைபெற்று முடிந்தன.