மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் பின்வரும் திகதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று (02) முற்பகல் 8.30 தொடக்கம் மாலை 5 மணி வரை சுமைதாங்கியடி, விமாப்படைத்தளப் பகுதி, சேற்றுக்குடா, திமிலதீவு, புதூர் மற்றும் வவுணதீவு பிரதேசங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 04ஆம் திகதி முற்பகல் 8.30 தொடக்கம் மாலை 5 மணி வரை சந்திவெளி மற்றும் மாவடிவேம்பு பிரதேசங்களுக்கான மின் தடைப்படவுள்ளது.
இதேவேளை 05ஆம் திகதி முற்பகல் 8.30 தொடக்கம் மாலை 5 மணி வரை சுமைதாங்கியடி, விமாப்படைத்தளப் பகுதி, சேற்றுக்குடா, திமிலதீவு, புதூர் மற்றும் வவுணதீவு பிரதேசங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 06ஆம் திகதி முற்பகல் 8.30 தொடக்கம் மாலை 5 மணி வரை பெரியபோரதீவு பகுதியில் மின் தடைப்படவுள்ளது.
07ஆம் திகதி முற்பகல் 8.30 தொடக்கம் மாலை 5 மணி வரை சுமைதாங்கியடி, விமாப்படைத்தளப் பகுதி, சேற்றுக்குடா, திமிலதீவு, புதூர் மற்றும் வவுணதீவுர தேசங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
8ஆம் திகதி முற்பகல் 8.30 தொடக்கம் மாலை 5 மணி வரை தாளங்குடா, புதுகுடியிருப்பு, கிரான்குளம், குருக்கள்மடம், களுதாவளை மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேசங்களுக்கான மின் தடைப்படவுள்ளது.
இத்துடன் 9ஆம் திகதி முற்பகல் 8.30 தொடக்கம் மாலை 5 மணி வரை சுமைதாங்கியடி, விமாப்படைத்தளப் பகுதி, சேற்றுக்குடா, திமிலதீவு, புதூர் மற்றும் வவுணதீவு பிரதேசங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.