மட்டக்களப்பு ஊறணியில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த வரவேற்பு வளைவினை புனரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமாரின் முயற்சியின் காரணமாக மல்டிலக் பெயன்ற் நிறுவனத்தின் அனுசரணையுடன் இதன் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பின் அடையாளமாகவும் உள்ள இந்த வரவேற்பு வளைவு நீண்ட நாட்களாக புனரமைக்கப்படாமல் இருந்துவந்தமை குறிப்பிடத்தக்கது.