மட்டக்களப்பு தாமரைக்கேணி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் ஆடிப்பூர விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
தாமரைக்கேணி முத்துமாரியம்மன் ஆலயத்தில் இந்த நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்றது.
நேற்று காலை முதல் தாமரைக்கேணி ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் தலைவர் குமாரதாஸன் தலைமையில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மஞ்சல் நீராடும் நிகழ்வு நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து நேற்று மாலை அம்மனுக்கு மிகவும் பிடித்தமான கஞ்சியை அடியார்கள் ஊர்வலமாக கொண்டுவந்து அம்மனுக்கு படைத்தனர்.
இந்த கஞ்சி களஞ்சிய ஊர்வலத்தில் பெருமளவான பெண்களும் ஆண்களும் கலந்துகொண்டனர்.
மிக நீண்டகாலமாக கிழக்கு மாகாணத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் இந்த நிகழ்வினை நடத்திவருகின்றது.