ஹோலி இனொசன்ஸ் அக்கடமி பாலர் பாடசாலை சிறார்களின் சித்திரம் மற்றும் கைப்பணி பொருட்களின் கண்காட்சி

(லியோன்)
 
மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகர் ஹோலி இனொசன்ஸ்  அக்கடமி பாலர் பாடசாலை சிறார்களின் சித்திரம் மற்றும் கைப்பணி பொருட்களின் கண்காட்சி சொமஸ்கன் அருட்சகோதரிகளின் அனுசரணையுடன்  பாடசாலை அதிபர் அருட்சகோதரி .இ .சுலக்ஸனா தலைமையில் நேற்று காலை 09.00 மணியளவில் நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளினால் திறந்து வைக்கப்பட்டது . 

இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக   மட்டக்களப்பு  முன்பள்ளி பருவ பராமரிப்பும் ,அபிவிருத்தியும்  உதவி கல்வி பணிப்பாளருமான .எம் .புவிராஜ் ,  சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட செயலக முன்பள்ளி பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி  மாவட்ட இணைப்பாளர்  வி . முரளிதரன் , ஏறாவூர் பற்று பிரதேச  முன்பள்ளி பருவ பராமரிப்பு ,அபிவிருத்தி உத்தியோகத்தர்  மொகமட் சர்ஜூன் , மியானி அருட்சகோதரிகளின் தலைமை  அருட்சகோதரி  மரிய கிராஷியா  மற்றும் அருட்சகோதரிகள் ,அருட்தந்தை ஆகியோர் கலந்துகொண்டனர்.

வருகை தந்த அதிதிகளை பாடசாலை சிறார்களினால் மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டன . நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்ற பற்று இறை வணக்கத்துடன் ஆரம்பமானது .  இதனை தொடர்ந்து  சிறுவர்களின் கண்காட்சி கூடத்தை  அதிதிகளினால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

இக் கண்காட்சியை பார்வையிடுவதற்காக  இப் பாடசாலை சிறார்கள் ,இவர்களின் பெற்றோர்கள் ,தன்னாமுனை புனித வளனார் வித்தியாலய சிறுவர்கள் ,மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய சிறார்கள் ,இப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் ,மியானி முன்பள்ளி தொழில் பயிற்சி பெரும் மாணவர்கள் , ஆசிரியர் மற்றும் இப் பகுதி முன்பள்ளி பாடசாலைகளின் சிறார்கள்  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இக் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் யாவும் இப் பாடசாலை ஆசிரியர்கள் , பாடசாலை சிறார்கள் மற்றும் இவர்களின் பெற்றோர்களின் பங்களிப்புடன் மிக சிறப்பாக தயாரிக்கப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது .இக் கண்காட்சிகள் பொருட்கள் யாவும் இன்றும்  நாளையும் காட்சி படுத்த வைக்கப்பட்டிருக்கும்.