கிரானில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பகுதியில் இன்று புதன்கிழமை காலை தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்த்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான்,ரெஜி கலாசார மண்டபத்துக்கு பின்புறமாகவுள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் கிராண் பிரதான வீதியை சேர்ந்த ச.கிருஸ்ணகுமார்(37வயது)என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் தொடர்பில் சந்தேகங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்த பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.