கிரான் பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள புணானை மேற்கில் உள்ள விவசாய நிலங்களுக்கு போதியளவு நீர் வசதி இல்லாத காரணத்தினால் இவ்வருட சிறுபோக விவசாயச் செய்கையில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சுமார் 5500 ஏக்கர் வேளான்மை செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா ஸ்ரீ லங்கா விவசாயத் சம்மேளனத் தலைவர் ஜ.எல்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.
மினுமினுத்தவெளி மேற்கு,மினுமினுத்தவெளி கிழக்கு, அக்குறானை, கிளச்சிமடு, பொத்தானை,கொடுவாமடு,மயிலந்தனை,புனானை போன்ற இடங்களிலே பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மாதுறு ஓயா வடிச்சல் நீரினை அணைக்கட்டி இவ் வேளான்மை செய்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்தார்.
தற்போது 1மாத காலப் பயிராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.ஏற்கனவே இவ்விடயம் தொடர்பாக மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விணாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எல்.எம்ஹீஸ்புல்லா ஆகியோர்களுடன் தொடர்பு கொண்டமையைடுத்து அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கடந்த வாரம் நீர் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் அது போதுமானதாகவில்லை. எனவே போதுமானவளவு நீர்வசதிபெற சம்பந்தப்பட்ட அமைச்சு முன்வரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.