(தனு)
மட்டக்களப்பு வின்சென்ட் தேசிய பாடசாலையில் பழைய மாணவர் சங்கத்தின் எற்பாட்டில் மாரடைப்பு நோய் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு பாடசாலை அதிபர் திருமதி இராஜகுமாரி கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இங்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியகலாநிதி அருள்நிதி அவர்களால் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு மாரடைப்பு நோய் எவ்வாறு எற்படுகிறது பற்றியும் அதன் தாக்கம் பற்றியும் இங்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
எமது அன்hறட வாழ்வில் நாம் உட்கொள்ளும் கொழப்பு உணவுகள் உடற்பயிற்சியின்மை புகைத்தல் பரம்பரை இயல்பு பொன்ற காரணங்களாலும் இந்நோய் எற்படுகின்றது.
இதேவேளைநிரழிவுநோயாளிகளையும் இந்நோய் தாக்குகின்றது இந்நோய் தாக்கத்திலிருந்து மாணவர்களை பாதுகாக்க மரக்கறிகள் மீன்கள் தானியங்கள் பழங்களை எமது அன்றட வாழ்வில் நாம் சேர்த்து கொள்ளுவதுடன் தூய்மையான சுற்றாடல் மனதிற்கினிய இசை தியானம் போன்ற செயற்பாடுகளினாலும் எம்மை பாதுகாத்துக்கொள்ளமுடியுமென வைத்திய கலாநிதி இங்கு தெரிவித்தார்.