(லியோன்)
மூளையில் ஏற்பட்டிருந்த கட்டி காரணமாக புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இருதயபுரம் மேற்கு,12ஆம் குறுக்கு வீதியில் வசிக்கும் அருளானந்தன் அவர்களின் மகளான செல்வி நீரோமியா என்பவரே இவ்வாறு இறந்துள்ளார்.
இவர் கடந்த 5 ஆம் திகதி தனது பெற்றோருடன் கோவிலுக்கு சென்று வீடு திரும்பியதும் நீரோமியா தனது ஒரு பக்க கையும், காலும் வலிப்பதாக தாயிடம் கூறியுள்ளார்.
அதன் பின் இவர் மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டார். அனுமதிக்கபட்ட நீரோமியாவை பரிசோதித்த வைத்தியர் இவரின் மூளையில் சளி கட்டி இருப்பதாக கூறி, மேலதிக சிகிச்சைகாக கொழும்பு வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளார்.
கொழும்பு வைத்திய சாலையில் அனுமதிக்கபட்ட நீரோமியாவை பரிசோத்த வைத்தியர் இவரின் மூளையில் உள்ள கட்டி உடைந்து விட்டதாக கூறியதோடு, சில மணித்தியால சிகிச்சையின் பின் நீரோமியா இறந்து விட்டதாக கூறி உள்ளார்கள்.
சில மணித்தியாலங்கள் கடந்த பின் இவ் வைத்திய சாலை பணியாளர்கள் சிலர் நீரோமியாவின் தாயாரிடம் இவரின் இரு கண்களையும், கிட்னியையும் தரும் படி கேட்டதாகவும் இதற்கு தாயார் மறுப்பு தெரிவித்ததாகவும், அதன் பின் உறவினர்களை மட்டக்களப்புக்கு செல்லுமாறும், நீரோமியாவின் உடலை தாங்கள் மட்டக்களப்புக்கு அனுப்பி வைப்பதாக வைத்தியசாலை பணியாளர்கள் கூறியாதகவும் தெரிவித்த நீரோமியாவின் உறவினர்கள் எனினும் தாங்களே அவரின் உடலை மட்டக்களப்புக்கு எடுத்துவந்ததாகவும் தெரிவித்தனர்.