தயா அறக்கட்டளை நிலையத்தால் மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு சுவார்ட்டி விளையாட்டு கழகத்திற்கு சீருடை வழங்கும் நிகழ்வு நேற்று மாலை தயா படிப்பகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கழக ஆலோசகர க.நீதிராஜா மற்றும் .தயா அறக்கட்டளை நிலையத்தின் ஸ்தாபகர் த.தயாபரன் அவர்களும் கலந்துகொண்டார்கள்.
நிகழ்வை கழக தலைவர் ர.சுரேஸ்வரன் இவ் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். கழக உறுப்பினர்களும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சீருடைகளை த.தயாபரன் அவர்கள் அன்பளிப்பு செய்தார் .இந்த தயா அறக்கட்டளை நிலையம் கடந்த சில மதங்களுக்கு முன் தயா படிப்பகத்தை கோட்டைக்கல்லாற்றில் நிர்மாணித்து திறந்து வைத்துள்ளது.
இந்h அறக்கட்டளை நிலையம் மேலும் பல பிரதேசங்களுக்கு தனது சேவையை விஸ்தரிக்க உள்ளதாக பிரான்சில் வசிக்கும் அதன் பணிப்பாளர் த.அருண் தெரிவித்தார்.