பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு

( எஸ்.எம்.எம்.றம்ஸான் )

சாய்ந்தமருதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகுதி எரிவாயு சிலிண்டர்களை அம்பாறை பொலிஸார் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

சாய்ந்தமருது அல்-கமறூன் வித்தியாலயத்தின் அருகிலுள்ள தனியார் எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையத்தில் தேடுதல் நடத்திய போது அங்கிருந்து 650க்கு மேற்பட்ட நிறப்பப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை அம்பாறை பொலிஸார் கைப்பற்றினர்.

கல்முனை நீதிமன்றத்தின் கட்டனளயின் பிரகாரம்    கல்முனை பொலிஸ் நிலையத்தினூடாக இவை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.என்.ஜயலத் தெரிவித்தார்.

ஓரே நாளில் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் 3000க்கும் மேற்பட்ட பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களை அம்பாறை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்ததோடு மேலும் இத்தேடல் தொடரும் என்றும் அவர் கூறினார்.