சுவாமி விவேகானந்தரின் ஜனன தினநிகழ்வுகள் நேற்று 12ஆம் திகதி ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இந்து இளைஞர் மன்றமும், இந்துமாமன்றமும் இணைந்து சிறப்புற நடாத்தியது.
விபுலானந்தா அபிவிருத்தி நிலைய தலைவர் த.கயிலாயபிள்ளை தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் இந்தியாவின் மதுரையை சேர்ந்த வேதாந்த சர்வதேச அமைப்பின் ஸ்ரீமத் வேதாந்த ஆனந்த ஜி அருளாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார். விபுலானந்த அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தரின் திருவுருவச் சிலைகளுக்கு மலர்தூவி மாலை அணிவிக்கும் நிகழ்வில் சுவாமிஜி கலந்து கொள்வதையும் கலந்து கொண்ட இல்ல மாணவர்களையும் படங்களில் காணலாம். உலகளாவிய ரீதியில் நடைபெறுகின்ற இந்நிகழ்வுகள் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் வருடந்தோறும் சிறப்புற நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.