சமர்த்தி உத்தியோகஸ்த்தர்களாக கடமையாற்றியவர்கள் தற்போது வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் கீழ் உள்ளீர்க்கப்பட்டு முகாமைத்துவ உதவியாளர் வகுப்பு 1, வகுப்பு2. வகுப்பு3 எனும் தரங்களுக்குள் இணைக்கப்பட்டுள்ளார்கள்.
கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கடமையாற்றிய சுமார் 21 சமுர்;த்த்தி உத்தியோகஸ்த்தர்கள் இன்று முதல் முகாமைத்துவ உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான நியமனக்கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று 07.01.2014 கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி தினேஸ் கௌரி, மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதி பணிப்பாளர் ப+.குணரெட்ணம், பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியேகஸ்த்தர் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் உட்பட சமுர்த்தி உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டார்கள்.