ஆலையடிவேம்பு இந்துமாமன்றத்தின் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

( வி.சுகிர்தகுமார் )

அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அனுசரனையுடன் ஆலையடிவேம்பு இந்துமாமன்றம் முன்னெடுத்;த அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (12) நடைபெற்றது.
மன்றத்தின் தலைவர் வே.சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவில் இயங்கிவரும் பல அறநெறிப்பாடசாலைகளுக்கும் கற்றல் உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.