சமாதானம், புரிந்துணர்வு தொடர்பான ஆலோசனைக்குழுக் கூட்டம்

( வி.சுகிர்தகுமார் )

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் சமாதானம், புரிந்துணர்வு தொடர்பான ஆலோசனைக்குழு அமைப்பதற்காக பொதுக்கூட்டம் எதிர்வரும் 2014.01.13ஆம் திகதி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் மகிந்த சிந்தனை திட்டத்திற்கமைவாக அனைத்து இன மக்களிடையேயும்  நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதன் நோக்கில் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் நாடு பூராகவும்; சமாதானம், புரிந்துணர்வு தொடர்பான ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுவருகின்றது.

இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப. 2.00 மணியளவில் பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் தலைமையில்;  நடைபெறவுள்ள நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ரஜீவ் விஜேயசிங்க கலந்து கொள்வார்.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச எல்லைக்குட்பட்ட பிரதேசத்தின் புத்திஜீவிகள் , நலன்விரும்பிகள், மக்கள் நலன்புரி ஸ்தாபனங்கள் , கிராமிய சங்கங்கள், சிவில் பாதுகாப்பு குழு, கிராம மட்ட தொண்டர் நிறுவனம், பாடசாலைகள் ஆகியவற்றின்  பிரதிநிதிகள் உட்பட  அனைவரையும்  தவறாது சமூகம் கொடுத்து ஆலோசனைகளை வழங்குவதுடன், ; குழுவினை அமைப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறும் பிரதேச செயலாளர் கேட்டுக் கொண்டார்.