ஆலயத்துக்கு செல்லும் இருதயபுரம் வீதி,கூழாவடி வீதி,புன்னைச்சோலை வீதி ஆகியவற்றில் காணப்படும் கட்டாக்காலி நாய்கள் பொதுமக்களை பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகிவருவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆலயத்துக்கு செல்லும் பக்தர்களை சிலவேளைகளில் நாய்கள் கடிப்பதாகவும் சில வேளைகளில் துரத்துவதாகவும் இதன்போது சிலர் கீழே வீழ்ந்தும் காயங்களுக்குள்ளாவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக அதிகாலை வேளையிலும் இரவு வேளையிலும் செல்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆத்துடன் ஆலய வளாகங்களிலும் கட்டாக்காலி நாய்கள் தொல்லை அதிகரித்துவருவதாகவும் ஆலயத்துக்கு செல்லும் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு ஆளாவதாகவும் ஆலயத்துக்கு செல்லும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாநகர சபை அதிகாரி ஒருவரிடம் வினவியபோது,
கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான வளங்கள் எதுவும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.
அதன் காரணமாக கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளமுடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்தார்.
