மெதடிஸ்த மத்திய கல்லூரி தொடர்பான செய்திகளை பெற குறுஞ்செய்திச்சேவை

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் தகவல்களை பெறும் வகையில் குறுந்தகவல் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க இராப்போசன ஒன்றுகூடல் நிகழ்வின்போதே இந்த குறுஞ்செய்திச்சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர் வை.கோபிநாத் இதனை ஆரம்பித்துவைத்தார்.

மெதடிஸ்த மத்திய கல்லூரியின் நிகழ்வுகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் உடனுக்குடன் அறிவிக்கும் வகையில் இந்த குறுஞ்செய்தி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இணைப்பினை மேற்கொள்வதற்கு Follow( space )@BAMCC  என்று டைப்செய்து 40404 என்ற இலக்கத்துக்கு அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.