தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரைதீவு பிரதேசசபை வரவு-செலவு திட்டம் தோல்வி

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காரைதீவு பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட அறிக்கை அதன் தவிசாளர் இராசையாவினால் இன்று புதன்கிழமை காலை சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது இடம்பெற்ற விவாதங்களை தொடர்ந்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஐந்து உறுப்பினர்களைக்கொண்ட காரைதீவு பிரதேசசபையின் நான்கு உறுப்பினர்கள் வரவு-செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஒரு உறுப்பினரும் இதன்போது எதிராக வாக்களித்துள்ளனர்.

பிரதேசசபையின் தவிசாளர் தயாரித்துள்ள வரவு-செலவுத்திட்டம் தன்னிச்சையாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.