மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பேருக்கு தேசிய கலாபூசணம் விருது

கிழக்குப்பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறை விரிவுரையாளர் திருமதி சங்கரநாராயணன் கலை,கலாசார மரபுரிமைகள் அமைச்சின் வருடாந்த கலாபூசணம் தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.


இசைத்துறைக்கு இவர் ஆற்றிவரும் பணி மற்றும் சாதனைகளுக்காக இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கலாபூசணம் 2013 விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு ரோயல் கல்லூரி நவரங்கரக மண்டபத்தில் கலாசார கலை விவகார அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர், புரவலர் ஹாசீம், கலாசார அமைச்சின் செயலாளர் வசந்த எக்கநாயக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஏழு பேர் தேசிய கலாபூசணம் விருது பெற்று மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.