மைலம்பாவெளியில் மொத்தி இல்லாத விசித்திர வாழைக்குலை

(ஜனாதீபன்)

மட்டக்களப்பு மைலம்பாவெளி கிராமத்தில் ஜனாதிபதி வீதியில் எகட் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் திருமதி ஜ.குலேந்திரன் என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் உள்ள வாழை மரமானது இயற்கைக்கு மாறான முறையில் குலைபோட்டுள்ளது.

இவ்வாழைக்குலையில் வழமையாக வாழைக்குலைபோடும் போது முதலில் மொத்திவந்து பின் வாழைகாய்வருவதுபோல் இல்லாமல் இயற்கைக்குமாறாக வாழைக்காய்களே நேரடியாக வந்துள்ளன.