புனித திரேசா பெண்கள் பாடசாலையில் சித்திரக்கண்காட்சி

(லியோன்)  
 
மட்டக்களப்பு  கல்வி  வலயப் பாடசாலை  மாணவர்களினால்  சித்திரக் கண்காட்சி  இன்று  புனித  திரேசா  பெண்கள்  பாடசாலையில்  சித்திரக் கல்வி  வலய, சித்திர  பாட   சேவைக்கால  ஆசிரியர்  ஆலோசகர்  சி . ரவீந்திரன்  தலைமையில் ஆரம்பமானது.


இக்  கண்காட்சியானது பிரதம அதிதியாக  கலந்துகொண்ட பிரதிக் கல்விப்  பணிப்பாளர்  குருகுல சிங்கத்தினால் திறந்து  வைக்கப்பட்டது .

மட்டக்களப்பு  கல்வி  வலயத்தின்  அனுசரனையுடன் இந்த கண்காட்சி நடத்தப்பட்டுவருகின்றது.

இச்  சித்திரக் கண்காட்சியை  பார்வையிடுவதற்காக  மட்டக்களப்பு   கல்வி வலய  பாடசாலை  மாணவர்களும் , ஆசிரியர்களும்  வருகை தந்திருந்தனர்.

இதன்போது  வைக்கப்பட்டுருந்த  அனைத்து  சித்திரங்களும்  மற்றும் கைவினை சித்திரங்களும்  மாணவர்களின்   கை  வண்ணத்தால் , உருவாக்கப்பட்டுள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது .