அமிர்தகழி கருணை முன்பள்ளியின் ஒளிவிழா நிகழ்வுகள்

(லியோன்)

ஜேசு பாலகனின் பிறப்பைக்கொண்டாடும் மாதமான மார்கழி மாதத்தில் பிறப்பின் பொருளை உணர்த்தும் ஒளிவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகின்றது.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒளிவிழா நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு,அமிர்தகழி கருணை பாலர் பாடசாலையின் ஒளிவிழா நிகழ்வு அமிர்தகழி சித்திவிநாயகர் வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

கருணை பாலர் பாடசாலையின் அதிபர் திருமதி பிரதீபா தர்சன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் டி.பிரபாசங்கர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக முன்னாள் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் கே.டேவிட்,மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி இணைப்பாளர் புவிராஜா,பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகர் ப.முருகதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்;வுகள் நடைபெற்றதுடன் ஜேசு பிறப்பை குறிக்கும் வகையிலான நடன நிகழ்வுகளும் நடைபெற்றன.

இறுதியாக கருணை பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று நத்தார் பாப்பாவின் நிகழ்வுகளும் நடைபெற்றன.