மண்டூரில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

(தவக்குமார்)

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் கணேசபுரம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை முற்பகல் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம் கணேசபுரத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை திருச்செல்வம் என்பவர் எனவும் வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லாவெளிப் பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து குறிந்த இடத்திற்கு சென்று சடலத்தினை மீட்டதுடன் விசாரணையையும் மேற்கொண்டனர்.

இதன்போது சம்பவ இடத்துக்கு வந்த களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிவான் எம்.றியால் உடலை பார்வையிட்ட பின்னர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இவரின் தற்கொலைக்கான காரணம் குடும்பத்தகராறே காரணம் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் வெல்லாவெளிப்  பொலிசார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதiனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.