அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு குவியும் பாராட்டுகள்

(வி.சுகிர்தகுமார்) 

வெளியிடப்பட்டுள்ள  க.பொ.த.உயர்தரப்பரீட்சைகளின் பெறுபேறுகளின் நிமித்தம் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையின் மாணவன் இராசநாயகம் ஹவிசாந் பௌதீக விஞ்ஞானத்துறையில் 3ஏ சித்திகளைப்பெற்று 2.3557 வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் 142ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.


இவரது பரீட்சை முடிவுகளை அறிந்த பலரும் நேரில் சென்று பாராட்டி வருவதுடன் அதிபர் எம்.கிருபைராஜா மகிழ்ச்சி வெளியிட்டார்.

சென்ற வருடமும் இதே பாடசாலையை சேர்ந்த மாணவி த.தர்ஷிக்கா உயிரியல் துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். அக்கரைப்பற்று நாவற்காடு பிரிவைச் சேர்ந்த இராசநாயகம் சுகந்தினி ஆகியோரின் புதல்வனான இவர் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததுடன் க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் ஆங்கில மொழிமூலம் தோற்றி 8யு 1ஊ பெறுபேற்றினை பெற்றுக் கொண்டவர்.

தனது எதிர்கால இலட்சியம் சிறந்த பொறியியலாளர் எனும் கருத்தை வெளியிட்ட இவர் தனக்கு கல்வியினை புகட்டிய அனைத்து ஆசிரியர்களுக்கும் பாடசாலை அதிபருக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றி தெரிவிப்பதாகச் சொன்னார்.

பெற்றோர் கருத்து தெரிவிக்கையில் ஆங்கில் அறிவு பெரிதாக இல்லாத தங்களது சாதாரண குடும்பத்தை சேர்ந்த மகனுடைய பரீட்சை முடிவுகள் சொல்லமுடியாத மகிழ்வைத் தருவதாக குறிப்பிட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவிப்பதை படத்தில் காணலாம்.