கிழக்கு மாகாண கராத்தே சுற்றுப்போட்டியில் சாதனை

(வி.சுகிர்தகுமார் )

கிழக்கு மாகாண கராட்டி சுற்றுப்போட்டியில் ஜே.கே.எம்.ஓ சங்கம் 84 தங்கப்பதங்கங்களை பெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டது.


அண்மையில் கல்முனை நகரசபை மண்டபத்தில் கிழக்கு மாகாண கராட்டி சம்மேளனத் தலைவர் கென்சிடி.எப்.அலோசியஸ் தலைமையில் நடைபெற்ற சுற்றுப்போட்டிகளின் போதே ஜே.கே.எம்.ஓ சங்கத்தின் மாணவர்கள் இவ்வாறு சாதனை படைத்தனர்.

இவர்கள் 84தங்கப்பதக்கம்,07வெள்ளிப்பதக்கம்,14பித்தளைப் பதக்கம் அடங்கலாக 105 பதங்கங்களைப் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

நடைபெற்ற  போட்டிகளின் காலை நேர நிகழ்வுகளில் கிழக்கு மாகண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர், மாலை நிகழ்வுகளில் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் உள்ளிட்டோரும் அதிதிகளாக கலந்த சிறப்பித்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பயிற்சிகளை கிழக்கு மாகாண பிரதம போதனாசிரியர் கென்சி க.ஹேந்திரமூர்த்தி, கென்சி க.குககுமாரராஜா,கென்சி எஸ்.முருகேசு,கென்சி க.ரவிச்சந்திரன்,கென்சி எம்.வி.செயினுஸ் உள்ளிட்டோர் வழங்கியிருந்தனர்.

குறித்த சுற்றுப்போட்டிகளில் 10சங்கங்களைச் சேர்ந்த 250 போட்டியாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.